search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வெங்காய நடவு பணி"

    • போதிய விலை கிடைக்காததால், விவசாயிகளும் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
    • வெங்காயத்தை விற்க முடியாமல் சேமித்து வைத்து உள்ளனர்.

    உடுமலை:

    உடுமலை வட்டாரத்தில் காய்கறி பயிர்கள் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகின்றன. ஆண்டு முழுவதும் சின்ன வெங்காயத்தை விவசாயிகள் உற்பத்திசெய்கின்றனர்.சமீப நாட்களாக தக்காளி, வெங்காயம் உள்ளிட்ட காய்கறிகள் மழையால் பாதிக்கப்பட்டு உற்பத்தி குறைந்தன.

    மேலும் அதற்கு போதிய விலை கிடைக்காததால், விவசாயிகளும் கடுமையாக பாதிக்கப்பட்டனர். கிலோ 5 ரூபாய்க்கு தக்காளியும், 10 ரூபாய்க்கு குறைவாக வெங்காயமும் விற்பனையாகின. தக்காளி, வெங்காயம் பயிரிட்ட விவசாயிகள் நஷ்டத்தை சந்தித்தனர். இந்நிலையில் தற்போதைய நிலையில் மழை பாதிப்பு குறைந்துள்ளதால் வைகாசி பட்ட வெங்காய சாகுபடியை விவசாயிகள் மீண்டும் மேற்கொண்டுள்ளனர்.

    ஏற்கனவே விவசாயிகள் பலர் பட்டறை அமைத்து, வெங்காயத்தை விற்க முடியாமல் சேமித்து வைத்து உள்ளனர். தற்போது சின்ன வெங்காயம் கிலோ ரூ.20க்கு மேல் கொள்முதல் செய்யப்படுகிறது. இருப்பினும் வரும் நாட்களில் போதிய விலை கிடைக்கலாம் என்ற நம்பிக்கையுடன் கடமையே கண்ணாக மீண்டும் வெங்காய நடவில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.

    ×